கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கு ரூ.2½கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்-குடியிருப்பு பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கு ரூ.2½கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணியை சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கொடுமுடி,
கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட ஒத்தக்கடை கணபதிபாளையம் அருகே 47 ஆயிரத்து 850 சதுர அடி நிலப்பரப்பில் கொடுமுடி புதிய தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்ட ரூ.2 கோடியே 61 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பணி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். ஈரோடு செல்வகுமாரசின்னையன் எம்.பி., கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புதூர் கலைமணி, முன்னாள் கொடுமுடி பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் விஜயநாத், துணைத்தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோல் கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட கொளத்துப்பாளையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொளத்துப்பாளையம் மெயின்ரோடு முதல் தெற்கு மூர்த்தியாபாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சோளக்காளிபாளையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கரூர்-ஈரோடு மெயின்ரோடு முதல் சிட்டுப்புள்ளாம்பாளையம் முனியப்பன் கோவில் முன்பு வரை தார்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணியையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கொடுமுடி சங்கர வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஜப்பானில் வருகிற 11-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஜப்பான் செல்வதற்காக ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
மேலும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ரூ.5 ஆயிரம் மாணவிக்கு வழங்கப்பட்டது. கொடுமுடி பழைய பஸ் நிலையத்தில் ரூ.4 லட்சம் செலவில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஈரோடு செல்வகுமாரசின்னையன் எம்.பி., வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிகளில் சென்னசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன், சென்னசமுத்திரம் பேரூர் செயலாளர் கோபால், கே.தளபதி, எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஈரோடு ஆர்.டி.ஒ. முருகேசன், கொடுமுடி வருவாய் தாசில்தார் முத்துலட்சுமி, கொடுமுடி ஊர்நல கமிட்டி தலைவர் கே.சி.பாலகிருஷ்ணன், வக்கீல் முத்துசாமி, வெண்ணிலா பாலு, கொடுமுடி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story