எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக மெகா கூட்டணி அமைத்துள்ளன மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக மெகா கூட்டணி அமைத்துள்ளன என்று மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக மெகா கூட்டணி அமைத்துள்ளன என்று மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் குற்றம்சாட்டினார்.
பயங்கரவாத முகாம்கள்
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் நேற்று கர்நாடகத்திற்கு வருகை தந்திருந்தார். துமகூருக்கு வந்த அவர், சித்தகங்கா மடத்திற்கு வந்து மடாதிபதியிடம் ஆசி பெற்றார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நமது ராணுவத்தினர், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் அக்கட்சியின் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், இது முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்று விமர்சிக்கிறார்.
ராணுவ நடவடிக்கை
நமது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை காங்கிரசார் வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறார்கள். ராணுவ நடவடிக்கை விஷயத்தில் காங்கிரசார் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். மனம் வந்தபடி பேசும் காங்கிரசார் மீது ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?.
எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பது, மெகா கூட்டணி அல்ல, அது மெகா ‘டக்’ (மோசமான) கூட்டணி. சுயநலத்திற்காக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.
நீண்ட நாள் நீடிக்காது
முதல்-மந்திரி குமாரசாமி, ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் மொத்த விவசாய கடனையும் தள்ளுபடி செய்வதாக கூறினார். ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார்.
பொய் வாக்குறுதிகளின் அடிப்படையில் குமாரசாமி ஆட்சிக்கு வந்துள்ளார். இந்த அரசு நீண்ட நாள் நீடிக்காது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.
Related Tags :
Next Story