காஞ்சீபுரம் அருகே கிரேன் மோதி தொழிலாளி சாவு


காஞ்சீபுரம் அருகே கிரேன் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 March 2019 4:09 AM IST (Updated: 9 March 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கிரேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் குண்டுகுளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தயாளன் (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலை முடிந்து சைக்கிளில் பெரும்பாக்கத்தில் இருந்து குண்டுகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். குண்டுகுளம் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு கிரேன் கண்ணிமைக்கும் நேரத்தில் தயாளனின் சைக்கிள் மீது மோதியது.

இதில் தயாளன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவ்வாறு ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவரான வந்தவாசி இளங்காடு பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (25) என்பவரை கைது செய்தார். உயிரிழந்த தயாளனுக்கு மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.


Related Tags :
Next Story