தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் 65 பேர் இடமாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 65 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதற்கான தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள், எழுத்தர்கள், போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 21 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 போலீஸ் ஏட்டுகள், போலீஸ்காரர்கள், எழுத்தர்கள் உள்பட 65 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாறுதல் செய்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story