மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 10 March 2019 3:30 AM IST (Updated: 10 March 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சுந்தரக்கோட்டை,

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே வலையபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி மேரி (வயது 50). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மன்னார்குடியில் உள்ள தங்களது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுப்பிரமணியன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறிய சுப்பிரமணியனும், அவருடைய மனைவி மேரியும் கீழே விழுந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மேரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story