100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள்


100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள்
x
தினத்தந்தி 10 March 2019 4:15 AM IST (Updated: 10 March 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அரியலூர்,

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், தாசில்தார் கதிரவன், கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story