நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
தேனி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி ஆகியவை தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து 200 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 200 கட்டுப்பாட்டு கருவிகள் தேனிக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த எந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை சரிபார்க்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.இந்த பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் நல்ல முறையில் இயங்குகிறதா? என்று சோதித்துப் பார்த்தனர். இந்த பணிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு தாசில்தார் ஜஸ்டின் சாந்தப்பாவிடம் கேட்டபோது, ‘மாவட்டத்தில் ஏற்கனவே சுமார் 1600 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 200 வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளும் சரிபார்க்கப்பட்டு உள்ளது. இந்த பணி ஒரே நாளில் முடிக்கப்பட்டு உள்ளது. சரிபார்க்கப்பட்ட எந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்படும்’ என்றார்.

Related Tags :
Next Story