திருப்பூரில், போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்
திருப்பூர் சந்திரகாவி நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங் கிவைத்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சந்திரகாவி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ வினால் எந்த குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. உலக சுகாதார நிறுவனம் இந்தியா வை போலியோ இல்லாத நாடாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால், போலியோ நோய் கிருமி மற்ற நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 1985 முதல் 4 கோடி குழந்தைகளுக்கு மேல் தடுப்பூசி அட்டவணைப்படி பல்வேறு வகையான தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளன.
ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள், அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப் படுகிறது. இதன் மூலம் போலியோ பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலில் இருந்து அறவே ஒழிக்கலாம். 1995-ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது.
இந்த முகாம்கள் மூலம் அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை 20 ஆண்டு போலியோ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள் ளது. 1999-ம் ஆண்டு முதல் முனைப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல் நாள் முகாமில் அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தை களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு, அடுத்த 2 நாட்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறும்.
ஆனால் முதல் நாள் முகாமிலேயே பெற்றோர் தவறாமல் தங்களது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு வழங்கப்பட்டதன் விளைவாக 1998 முதல் இந்த மாவட்டத்தில் போலியோ நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த வருடம் முனைப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (நேற்று) நடைபெற்றது. போலியோ சொட்டு மருந்து முகாம் 13 வட்டாரங்களில் 1,105 மையங்கள் மற்றும் 26 நடமாடும் குழுக்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் 23 மையங்கள் அமைத்து (3 நாட்களுக்கு) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு 2.28 லட்சம் குழந்தைகள் உள்ளார்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் விட்டு, இடம்பெயர் வோர், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து தொலை வில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்கும் மற்றும் சாலை யோரங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் வகையில் நட மாடும் குழுக்கள் அமைக்கப் பட்டு, சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
ஒவ்வொரு முகாம்களுக்கும் 4 பணியாளர்கள் வீதம் 4 ஆயிரத்து 709 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்குபவர் களும், 165 மேற்பார்வையாளர் களும் பணியை மேற்கொள் வார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் சத்யபாமா எம்.பி, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுமார், துணை இயக்குனர் சுகாதார பணிகள் (பொ) செல்வகுமார், மாநகர நல அலுவலர் பூபதி மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story