வாசுதேவநல்லூர் அருகே சூறைக்காற்றில் 1,700 வாழைகள் சேதம்
வாசுதேவநல்லூர் அருகே சூறைக்காற்றில் 1,700 வாழைகள் சேதமடைந்தன.
வாசுதேவநல்லூர்,
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்கனாப்பேரியில் ஏராளமான விவசாயிகள் பல்வேறு ரகங்களை சேர்ந்த வாழைகளை பயிரிட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வாசுதேவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இந்த சூறைக்காற்றில் சங்கனாப்பேரியை சேர்ந்த காந்திமதி என்பவருக்கு சொந்தமான 1,200 வாழைகள், பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான 100 வாழைகள், நாரணபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான 400 வாழைகள் என 1,700 வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் வாழைகளை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் சிவனுப்பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம் (சங்கனாப்பேரி), வீரசேகரன் (நாரணபுரம்), கிராம நிர்வாக உதவியாளர்கள் கருணாலயபாண்டியன், அற்புதமணி ஆகியோர் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story