நாகை மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்


நாகை மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தெரிவித்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் ஆயிரத்து 27 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 26 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் சொட்டு மருந்து முகாம் நடப்படும்.மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு 7 நடமாடும் வாகனங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட உள்ளது.

மேலும், மயிலாடுதுறை, சீர்காழி, நாகை மற்றும் வேதாரண்யம் பஸ் நிலையங்களில் 3 நாட்களில் 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும், ஒவ்வொரு மையத்திலும் 4 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் 25 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி வழங்கினார். இதில் நிலைய மருத்துவ அலுவலர் முருகப்பன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் (பொறுப்பு) ஸ்டாலின் மைக்கேல், உதவி திட்ட மேலாளர் டேனியல், மாவட்ட பயிற்சி மருத்துவர் திருமுருகன், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story