சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை நிர்மலா சீதாராமன் வேதனை
சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்தார்.
சென்னை,
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டலில் மகளிர் தின விழா நடந்தது. கூட்டமைப்பின் முதன்மை தலைமை அதிகாரி அனுபமா சிவராமன் தலைமை தாங்கினார். தென்னிந்திய வர்த்தக-தொழில்துறை கூட்டமைப்பு (சிக்கி) தலைவர் ஆர்.கணபதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியதாவது:-
மகளிர் தினம் என்று வருடத்தில் ஒருநாளை மட்டும் குறிப்பிட்டு கொண்டாடுவது போதாது. தற்போது பெண்கள் முன்னேற்றம் குறித்த காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ள னர். ஆனால் பல்துறைகளில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வரும் சாதனை பெண்களுக்கு போதுமான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.
வாழ்க்கையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வியல் முறைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவர்களை உலகுக்கு அடையாளப்படுத்தும் வகையில், விழா எடுத்து கவுரவிக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை வெளிக்கொணரவும், அந்த தன்னம்பிக்கை மற்றவர்களுக்கும் சென்றும் சேரும் வகையில் பொது இடங்களில் விழா எடுத்து அவர்களை பேச வைக்க வேண்டும். இதன் மூலம் மகளிர் முன்னேற்றத்தை இன்னும் மேம்படுத்த முடியும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய பல்வேறு உதவி மையங்கள் இயங்கி வருகிறது. பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் குறிப்பாக இளம் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை முன்னேற்றம் அடைய வைக்க முடியும். இந்த பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடலாம்.
அரசின் நலத்திட்டங்கள் குறித்து பெரும்பாலான பெண்களுக்கு தெரியவில்லை. ஏழை பெண்களை தேடி சென்று, அவர்களுக்கு ஏற்ற அரசின் நலத்திட்டங்களில் சேர்க்க வைத்து அவர்களது வாழ்வை செம்மைப்படுத்த தன்னார்வலர்கள் உதவலாம். அந்த வகையில் மகளிர் மேம்பாடு அடையாளப்படுத்தப்படும்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. எனவே அந்த நாட்டை உலகளவில் தனிமைப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் உலக நாடுகளும் நம்முடன் இருக்கிறார்கள். புலவாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் நிலைகள் மீது துல்லியமாக லேசர் ஆயுதங்களுடன் இந்திய படை தாக்குதலை நடத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின்போது, புலவாமாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலை நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story