மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை + "||" + The victim's suicide earnings were investigated by the coat of arms

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள ஆரியூர் பலவாளி தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சுகன்யா (வயது 21). இவர் களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் குழந்தை இல்லாததால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுகன்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுகன்யாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குச்சீட்டு எரிப்பு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலாளி திடீர் தற்கொலை
மார்த்தாண்டம் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குச்சீட்டு எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலாளி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
2. வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று பெண் மீது விழுந்ததில் காயமடைந்தார்.
4. அந்தியூர் அருகே தூக்குப்போட்டு டி.வி. மெக்கானிக் தற்கொலை
அந்தியூர் அருகே தூக்குப்போட்டு டி.வி. மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டார்.
5. மூங்கில்துறைப்பட்டு அருகே, பிரபல ரவுடி ,விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
மூங்கில்துறைப்பட்டு அருகே பிரபல ரவுடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.