விசாரணை கைதி திடீர் மரணம்: புதுவை சிறைத்துறை சூப்பிரண்டு பணியிடை நீக்கம்
சிறை கைதி மரணம் தொடர்பாக சிறைத்துறை சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 23). இவர் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாகூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு நவம்பர் 27-ந் தேதி உயிரிழந்தார்.
ஜெயமூர்த்தி மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே ஜெயமூர்த்தியின் மரணம் தொடர்பாக நீதிபதி சரண்யா விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயகுருநாதன், புதுவை சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன், சிறைத்துறை டாக்டர் ஆகியோர் மீது 304-வது (கொலை இல்லாத மரணத்தை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் தற்போது சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை புதுவை சிறைத்துறை ஐ.ஜி.பங்கஜ்குமார் ஜா பிறப்பித்துள்ளார்.

Related Tags :
Next Story