நடிகர் ரவி பிரகாஷ் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கிறார் நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார்


நடிகர் ரவி பிரகாஷ் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கிறார் நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார்
x
தினத்தந்தி 11 March 2019 4:00 AM IST (Updated: 11 March 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரவி பிரகாஷ் செல்ேபானில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பதாக நடிைக விஜயலட்சுமி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பெங்களூரு, 

நடிகர் ரவி பிரகாஷ் செல்ேபானில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பதாக நடிைக விஜயலட்சுமி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் மீது போலீசில் புகார்

கன்னடம், தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இவர், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவும்படி கன்னட திரையுலகத்தினரிடம் நடிகை விஜயலட்சுமி கேட்டு இருந்தார். இதையடுத்து, கன்னட நடிகர்கள், நடிகைகள் அவருக்கு பண உதவி வழங்கி வருகின்றனர்.

அதுபோல, கன்னட நடிகரான ரவி பிரகாசும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விஜயலட்சுமியின் உடல் நலம் விசாரித்ததுடன், அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவி இருந்தார். இந்த நிலையில், நடிகர் ரவி பிரகாஷ் மீது புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி ஒரு புகார் கொடுத்துள்ளார்.

செல்போனில் ஆபாசமாக பேசி...

அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை சந்திக்க கடந்த மாதம்(பிப்ரவரி) 27-ந் தேதி நடிகர் ரவி பிரகாஷ் வந்தார். அப்போது எனக்கு ரூ.1 லட்சம் கொடுத்தார். அதன்பிறகு, எனது செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியும், தன்னை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும் நடிகர் ரவி பிரகாஷ் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அவர் கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகை விஜயலட்சுமிக்கு தான் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்றும், அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்தது என்னுடைய தவறு என்றும், தன் மீது பொய் புகாரை போலீசில் கொடுத்திருப்பதாகவும் நடிகர் ரவி பிரகாஷ் கூறியுள்ளார்.

Next Story