மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் + "||" + Special camp for polio drops to children

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்
ராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள நகர சுகாதார நல மையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனையொட்டி பொது சுகாதாரத்துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 1,229 மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

இப்பணிகளில் மொத்தம் 4,192 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். இதேபோல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம்,பஸ் நிலையம், கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், அகதிகள் முகாம் போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் 27 சிறப்பு குழுக்கள் மற்றும் 33 நடமாடும் குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ராமநாதபுரம் நகர மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் மகன் விக்னஜித் வீருக்கு அமைச்சர் மணிகண்டன் போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சுகாதார பணிகளின் துணை இயக்குனர் குமரகுருபரன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தன்னை திட்டிய பெண்ணின் குழந்தையை கடத்திய 13 வயது சிறுவன் கைது - தாதரில் பரபரப்பு
தாதரில் தன்னை திட்டிய பெண்ணின் குழந்தையை கடத்திய 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
2. 10 மாத குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பரமத்திவேலூர் அருகே 10 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. வீடியோவை பார்த்து குழந்தை பெற முயன்ற திருமணம் ஆகாத இளம்பெண் பலி
மொபைல் போனில் வீடியோவை பார்த்து குழந்தை பெற்றெடுக்க முயன்ற திருமணம் ஆகாத இளம்பெண் பலியானார்.
4. பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை மலேசியாவில் ரஷிய தம்பதி கைது
ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது.
5. குடும்பத்தினரை காக்க குழந்தை உயிருடன் குழியில் புதைப்பு; சூனியக்காரர், தந்தை கைது
குடும்பத்தினரை காக்க குழந்தையை உயிருடன் குழியில் புதைத்ததற்காக சூனியக்காரர், தந்தை கைது செய்யப்பட்டனர்.