நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் எடியூரப்பா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 4:00 AM IST (Updated: 11 March 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வேட்பாளர் பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாங்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

எங்கள் கட்சி சார்பில் தற்போது எம்.பி.யாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படும். ஓரிரு தொகுதியில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.

22 தொகுதிகளில் வெற்றி

கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்காக பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். கர்நாடகத்தில் கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

கூட்டணி குறித்து காங்கிரசில் அதிருப்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும். ராகுல் காந்தி பெரிய தலைவர் ஒன்றும் கிடையாது. அவரது கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பயங்கரவாதிகள்

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நிலைமை எவ்வாறு இருந்தது என்பது நாட்டுக்கே தெரியும். பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை காங்கிரசாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story