நாடாளுமன்ற தேர்தலில் ‘‘பா.ஜனதா தலைவரை எதிர்த்து போட்டியிடுவேன்’’ சிவசேனா மந்திரி பேச்சால் பரபரப்பு


நாடாளுமன்ற தேர்தலில் ‘‘பா.ஜனதா தலைவரை எதிர்த்து போட்டியிடுவேன்’’ சிவசேனா மந்திரி பேச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 March 2019 5:00 AM IST (Updated: 11 March 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூட்டணி கட்சியான சிவசேனா மந்திரி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜல்னா, 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூட்டணி கட்சியான சிவசேனா மந்திரி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

மந்திரி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த மந்திரி அர்ஜூன் கோட்கர் தான் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவரும், எம்.பி.யுமான ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து ஜல்னா தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார்.

கூட்டணி அமைந்தாலும் தான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இரு கட்சிகளிடையேயும் கூட்டணி உறுதியானது. பா.ஜனதா, சிவசேனா இடையேயான தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே மேடையில் பேச்சு

இந்த நிலையில் ஜல்னாவில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே கலந்துகொண்டார். இந்த மடையை பகிர்ந்துகொண்ட சிவசேனா மந்திரி அர்ஜூன் கோட்கர், “பா.ஜனதா எம்.பி. ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து போட்டியிடும் தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசி இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அமைத்துவிட்ட நிலையில் அவரின் இந்த பேச்சு கூட்டத்தில் பரபரப்பை ஏற்பட்டது.

இருப்பினும் பின்னர் பேசிய ராவ்சாகேப் தன்வே அர்ஜூன் கோட்கர் பேச்சுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி அவரின் பேச்சு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story