வாகன சோதனையின்போது போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
கோவையில் வாகன சோதனையின்போது போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் போத்தனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வருவதை பார்த்தனர். உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, அதை ஓட்டி வந்தவரிடம் லைசென்ஸ் மற்றும் ஆவணங்களை கேட்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தது தவறு. எனவே அதற்கு அபராதம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.
அதை ஏற்க மறுத்த அவர்கள் 3 பேரும் போலீசாரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதுடன் அங்கு கிடந்த பாட்டிலை எடுத்து போலீஸ் ஜீப்பின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து, போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கள், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஹரீஷ்வரன் (வயது 28), விஜய் (23), ரஞ்சித் (21) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பொது சொத்தை சேதப்படுத்தியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story