கல்லூரி மாணவியை தாக்க முயன்ற பஸ் டிரைவர் சிறையில் அடைப்பு


கல்லூரி மாணவியை தாக்க முயன்ற பஸ் டிரைவர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 12 March 2019 3:45 AM IST (Updated: 12 March 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவியை தாக்க முயன்ற பஸ் டிரைவர் சிறையில் அடைப்பு.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வாரணவாசி கிராமத்தை சேர்ந்தவர் சுவேதா(வயது 19). அரியலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு கல்லூரி பஸ்சில் சென்று வந்தார். அக்கல்லூரி பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்த கோவிலூர் கிராமத்தை சேர்ந்த எழிலரசன்(35) என்பவருக்கும், சுவேதாவிற்கும் இடையே தகாராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த எழிலரசன், சுவேதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story