நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் 2,021 வாக்குச்சாவடிகள் கலெக்டர் தயானந்த் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் 2,021 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தயானந்த் தெரிவித்தார்.
சிவமொக்கா,
நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் ஏப்ரல் மாதம் 18, 23-ந்தேதிகள் என 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதாவது பெங்களூரு உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந்தேதியும், சிவமொக்கா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 23-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் தயானந்த் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவமொக்கா மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் உடுப்பி மாவட்டம் பைந்தூர் சட்டசபை தொகுதியும் இணைந்துள்ளது. சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 16,47,527 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 8,18,690 ஆண் வாக்காளர்களும், 8,28,801 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 36 பேரும் உள்ளனர்.
சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலை விட தற்போது 2,468 புதிய வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்களின் வசதிக்காக சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் 2,021 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எந்த பயமும் இன்றி வாக்களித்து செல்லலாம். சிவமொக்கா தொகுதியை பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் தேர்தல் விதி முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க 9 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி முதல்கட்டமாக அதிகாரிகள் கூட்டம் முடிந்துள்ளது. விரைவில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
சிவமொக்கா மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறி யாராவது செயல்பட்டால் 1950 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம்.
சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் சொத்து மற்றும் செலவினங்களை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்படும். அவர்கள் வேட்பாளர்களின் விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.அஸ்வினி, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி சிவராமேகவுடா ஆகியோர் இருந்தனர்.

Related Tags :
Next Story