கோலார் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் மஞ்சுநாத் தகவல்
வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் கோலார் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மஞ்சுநாத் கூறினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் நேற்று மாலை தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 18, 23-ந் தேதிகளில் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. வருகிற 19-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.
கோலார் நாடாளுமன்ற தொகுதிக்கு கோலார், சீனிவாசப்பூர், மாலூர், முல்பாகல், பங்காருபேட்டை, கோலார் தங்கவயல், ஆகிய 6 சட்டசபை தொகுதிகளும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி, சிட்லகட்டா ஆகிய 2 தொகுதிகள் என 8 சட்டசபை தொகுதிகள் அடங்கும்.
கோலார் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 12 ஆயிரத்து 227 ஆகும். அதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 09 ஆயிரத்து 331 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 02 ஆயிரத்து 897 பேரும் உள்ளனர்.
தேர்தலையொட்டி கோலார் மாவட்டத்தில் 2,100 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 476 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தே்ாதலில் பணியில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 079 ஊழியர்கள் ஈடுபடுவார்கள். 186 பிரிவு அதிகாரிகளும், 120 தாலுகா அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபடுவார்கள். 42 பறக்கும் படை, 62 சாதாரண பறக்கும் படையினரும் இந்த தேர்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இரவு-பகல் பாராமல் ஊழியர்கள் அங்கு சோதனை பணியில் ஈடுபடுவார்கள். இந்த முறை வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக 14 ஆயிரத்து 118 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தேர்தல் சமயத்தில் ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்ல வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்திற்கு மேல் வியாபாரிகள் எடு்த்து சென்றால் அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும்.
ரூ.50 லட்சத்திற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். இந்த தேர்தலை அமைதியாகவும், சுமுகமான முறையிலும் நடத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ஜெகதீஷ் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பேனர்கள், கட்-அவுட்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருவிழா, அரசியல் கட்சியினர் பேனர்கள் வைத்திருந்தால் அதை நாளைக்குள்(அதாவது இன்று) அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் பேனர் வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்-அவுட்கள், பேனர்கள் வைக்க போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றார்.
இந்த பேட்டியின் போது கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி கடோச், கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story