நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களின் செலவு விவரம் தீவிரமாக கண்காணிக்கப்படும் பெங்களூரு நகர தேர்தல் அதிகாரி தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு விவரம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று பெங்களூரு நகர தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் நேற்று கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பெங்களூரு மாநகராட்சி கமிஷனரும், பெங்களூரு நகர தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது மஞ்சுநாத் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. ஏப்ரல் மாதம் 18-ந் தேதி பெங்களூரு நகரில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
பெங்களூரு நகரில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரில் வைக்கப்பட்டு இருந்த அரசு விளம்பர பலகைகள், பஸ்களில் உள்ள அரசியல் தலைவர்களின் படங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் அகற்றப்படும். அரசு இணையதளங்களில் உள்ள படங்கள் அகற்றப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்கள் திரும்ப பெறப்பட்டு உள்ளன.
தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த ரூ.70 லட்சம் வரை மட்டும் செலவு செய்ய வேண்டும். கூடுதலாக செலவு செய்தால் சுப்ரீம் கோர்ட்டு வழிக்காட்டுதலின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (அதாவது இன்று) மத்தியில் இருந்து செலவு கணக்கீடு அதிகாரிகள் வருகிறார்கள். மேலும் வேட்பாளர்களின் செலவு விவரம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்திலும், மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். பெங்களூரு தெற்கு தொகுதியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் ஜெயநகர் 2-வது பிளாக்கில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திலும், பெங்களூரு வடக்கு தொகுதியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பெங்களூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்ப பெற வருகிற 29-ந் தேதி இறுதி நாளாகும். ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
பெங்களூரு நகரில் 88 லட்சத்துக்கு 81 ஆயிரத்து 66 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 46 லட்சத்து 32 ஆயிரத்து 900 பேர் ஆண் வாக்காளர்களாகவும், 42 லட்சத்து 48 ஆயிரத்து 166 பேர் பெண் வாக்காளர்களாகவும் உள்ளனர்.
போலி வாக்காளர்களை கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்தவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விடுமுறை உள்ளதால் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கடந்த முறை பதிவான வாக்குகளை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் அமைதியாக தேர்தல் நடத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு செய்து கொடுக்கப்படும். தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான இடங்களுக்கு பறக்கும்படைகள் அமைக்கப்படும். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
உரிமத்துடன் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் விரைவில் வர உள்ளனர்.
தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை பின்பற்றப்படும். நகரில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story