தலைமுடி நடும் சிகிச்சை பெற்ற தொழில் அதிபர் சாவு


தலைமுடி நடும் சிகிச்சை பெற்ற தொழில் அதிபர் சாவு
x
தினத்தந்தி 12 March 2019 3:11 AM IST (Updated: 12 March 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

தலைமுடி நடும் சிகிச்சை பெற்ற தொழில் அதிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மும்பை,

மும்பை சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஷரவான் குமார்(வயது43). இவர் மூச்சு திணறல், முகம் வீங்கிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பவாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒருவித அலர்ஜியின் காரணமாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

டாக்டர்கள் அவரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஷரவான் குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் தான் தனது வழுக்கை தலையில் முடி நடும் சிகிச்சை பெற்று உள்ளார். அந்த சிகிச்சையின் போது அவரது தலையில் 15 மணி நேரத்திற்கும் மேல் 9 ஆயிரத்து 500 முடி நடப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே இந்த சிகிச்சையால் ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story