பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மன்னார்குடியில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி உள்பட ஏராளமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் வலை விரித்து கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலை கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story