கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் புலிகள் தாக்கி 5 மாடுகள் பலி?
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் புலிகள் தாக்கி மேய்ச்சலுக்கு சென்ற 5 மாடுகள் இறந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் மாடுகளை அதிகம் வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை தினமும் அருகே உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை 50-க்கும் மேற்பட்ட மாடுகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அதில் 5 மாடுகள் இரவு வரை வீடுகளுக்கு திரும்பி வரவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று காலை கூக்கால் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன், புவனேந்திரன், வேலுச்சாமி, உலகநாதன் ஆகியோர் வனப்பகுதிக்குள் தங்கள் மாடுகளை தேடிச் சென்றனர். அங்கு வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் 5 மாடுகளும் இறந்து கிடந்தன. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்து கிடந்த 5 மாடுகளின் உடல்களில் ஆங்காங்கே காயங்கள் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் புலிகள் தாக்கி மாடுகள் இறந்துள்ளன. எனவே இந்த மாடுகளும் புலிகள் தாக்கி இறந்திருக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். த
கவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த மாடுகளின் உரிமையாளர் களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story