நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகள் போட்டி அய்யாக்கண்ணு பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகள் போட்டி அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 13 March 2019 4:00 AM IST (Updated: 13 March 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகள் போட்டி அய்யாக்கண்ணு பேட்டி.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

விவசாயிகள் கோரிக்கைக்காக 140 நாட்கள் டெல்லி சென்று போராடினோம். அப்போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 5 முறை எங்களை சந்தித்து உரிய உதவி செய்வதாக கூறினார். ஆனால், இன்று வரை உதவி செய்யவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில், லாபகரமான விலையை விவசாயிகளின் விளை பொருட்களுக்கும், கடன் தள்ளுபடியும், பென்சன், தனிநபர் இன்சூரன்ஸ் அளிப்பதாக தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாயிகள் 111 பேர், 2 தொகுதியில் போட்டியிட்டால் 222 பேர், 3 தொகுதியில் போட்டியிட்டால் 333 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்வார்கள். ஒரு மாதம் விவசாயி அலைந்து திரிந்து சோறு இல்லாமல் போய், சுயேச்சை வேட்பாளர் இறந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும்.

தமிழகத்தை பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து வேலை செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story