கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு கலெக்டர் தலைமையில் நடந்தது
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்யும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை எந்திரம் ஆகியவை வரப்பெற்று முதல்நிலை சரிபார்த்தலுக்கு பின்னர் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை எந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்யும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் முதல் நிலை சரிபார்த்தல் நடைபெற்றது.
பின்னர் அந்த வாக்குப் பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் விருப்பப்படி தேர்வு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மின்னணு வாக்குப்பதிவு எந்திர முதல் பரிசோதனை பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story