அம்பை அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


அம்பை அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2019 3:30 AM IST (Updated: 13 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பிரபாகர் அருண் செல்வம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தனர். அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் அம்பை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய் சண்முகநாதன், ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காரை ஓட்டி வந்தது அம்பை ஆர்.எஸ்.காலனியை சேர்ந்த சிவஞானம் மகன் ராஜேஷ் (வயது 37), கல்லிடைக்குறிச்சி இல்லத்தார் தெருவை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ் (19) ஆகியோர் என்பதும், அவர்கள் புகையிலை பொருட்களை கேரளாவில் இருந்து அம்பைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். 

Next Story