நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி, இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்க வேண்டும் - கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி, இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்க வேண்டும் - கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 March 2019 4:28 AM IST (Updated: 13 March 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் புதுவை மாநிலத்தில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று மதுக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் பாகூர் போலீஸ் நிலையத்தில் மதுக்கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில், பாகூர் தாசில்தார் குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், வடிவழகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், சாராயக்கடை மற்றும் மதுபான கடைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கிட வேண்டும்.. 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்யக்கூடாது. தனி நபருக்கு மொத்தமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தால் பாரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

மதுக்கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், கேமராக்கள் பழுதாகி இருந்த அவற்றை உடனடியாக சரி செய்து இயங்க வைக்க வேண்டும். ஷேர் ஆட்டோக்கள் மூலம் மதுப்பிரியர்களை ஏற்றிச் சென்று மதுபான பாட்டில்களை கடத்திச் சென்றால் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த கூட்டத்தில் பாகூர், கிருமாம்பாக்கம், சோரியாங்குப்பம் உள்பட 30-க்கும் மேற்பட்ட மதுபான கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story