ஜூலை மாதத்துக்குள் மின்சார ரெயில்களில் ‘வை-பை’ வசதி மத்திய ரெயில்வே முடிவு
மும்பையில் மின்சார ரெயில்களில்ஜூலை மாதத்துக்குள் வை-பை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் போக்குவரத்து உயிர்நாடியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில் சேவைகளை தினசரி சுமார் 80 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் பொழுதுபோக்கு வசதிக்காக ரெயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதல் முறையாக மின்சார ரெயில்களிலும் வை-பை வசதியை அறிமுகம் செய்ய மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜூலை மாதத்துக்குள்...
இதுபற்றி மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மின்சார ரெயில்களில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற ஜூலை மாதத்திற்குள் அனைத்து மின்சார ரெயில்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு விடும்.
அதன் மூலம் பயணிகள் தங்களுக்கு பிடித்த பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை கண்டு களிக்கலாம். தங்களுக்கு பிடித்த மொழி சினிமா படங்கள், பாடல்கள், டி.வி. நிகழ்ச்சிகள் தேர்வு செய்து கொள்ளும் வகையில் செல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்படும்’’ என்றார்.
Related Tags :
Next Story