சிவகாசி பகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் போலீசார் ஆய்வு


சிவகாசி பகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் போலீசார் ஆய்வு
x
தினத்தந்தி 14 March 2019 3:15 AM IST (Updated: 14 March 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசி,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடி அமைய உள்ள இடம், மின்சார வசதி, கழிப்பிட வசதி போன்றவை குறித்து தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் இரவில் தங்கவும், வாக்குப்பதிவு பெட்டிகளை வைக்கவும் போதிய இடவசதி உள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகள் அமைய உள்ள இடங்களை போலீஸ் அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு பூட்டு வசதி செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் ஒவ்வொரு மையத்துக்கும் சென்று அங்கு பூட்டு வசதியுடன் அறைகள் இருப்பதை உறுதி செய்து அறிக்கை தயார் செய்து வருகிறார்கள். இந்த பணியில் உளவுத்துறை போலீசாரும், நுண்ணறிவுத்துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story