திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 4:00 AM IST (Updated: 14 March 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவேங்கடம்,

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனூரிலுள்ள பட்டாசு ஆலையில் கடந்த மாதம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் உடல் கருகி பலியானார்கள். ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த 2 பேர் இறந்தனர். இதற்கிடையே வரகனூரை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (வயது 55) என்பவர் பலத்த தீக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணி க்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

அதனை தொடர்ந்து அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான வரகனூருக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருஷ்ணம்மாள் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து வரகனூர் மந்தை பகுதியில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது இறப்புக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் தாசில்தார் பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 10 மணியளவில் இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து உறவினர்கள் அவரது உடலை பெற்று சென்றனர். 

Next Story