ஓசூர் அருகே, இளம்பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரனூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இந்த பெண் ஓசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கொரனூர் கிராமத்தை சேர்ந்த சந்து (வயது 28) என்ற வாலிபர் மோட்டார்சைக்கிளில் வந்தார். இதையொட்டி அவர், இளம்பெண்ணை தனது மோட்டார்சைக்கிளில் ஏறுமாறும், வீட்டில் பத்திரமாக விட்டு விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண் அவரது மோட்டார்சைக்கிளில் ஏறினார். இதைத் தொடர்ந்து சந்து அருகில் உள்ள ஒரு தோப்புக்கு இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளம்பெண் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story