பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் கண்டித்து ஓசூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து ஓசூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண் களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் ்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மாணவர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story