பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் உள்ள மாணவ, மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்பாவி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்பாவி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story