பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சம்ப வத்தை கண்டித்து வக்கீல்கள் சாலை மறி யலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

வேலூர், 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நிதிநிறுவன அதிபர் திருநாவுக் கரசு (வயது 27) உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மர்மங்கள் நிறைந் துள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட் டுள்ளது. அவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க அந்த சம்பவத்தை கண்டித்தும், இதில் மறைந்துள்ள மர்மங் களை வெளிக்கொண்டு வர வும், குற்றவாளிகளை தண்டிக் கவும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கி விட்டன. கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.

வேலூர் ஊரீசு கல்லூரி மாணவிகளும் போராட் டத்தில் ஈடுபட்டனர். நேற்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது குற்ற வாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இனி இதுபோன்று வேறு பெண்களுக்கு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப் பினர். மாணவிகளுக்கு ஆதர வாக மாணவர்களும் போராட் டத்தில் கலந்து கொண்ட னர்.

கல்லூரி மாணவிகள் போராட்டம் நடந்த அதே வேளையில் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பணிபுரியும் பெண் வக்கீல்கள் அனைவரும் வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மகளிர் வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் காஞ்சனா அறிவழகன் தலைமை தாங்கினார். இதற்கு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இதுபோன்ற பாலியல் வழக்கு குற்றவாளி களுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது என்றனர்.

பின்னர் மறியலில் ஈடுபட் டவர்களிடம் சத்துவாச்சாரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வேலூர் கோர்ட்டில் பணி புரியும் வக்கீல்கள் பணியை புறக்கணித்தனர். நாளையும் (இன்று) புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பாளர் சரோஜா தலைமை தாங்கி னார். சிம்புதேவன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொள் ளாச்சி சம்பவத்தில் குற்ற வாளிகளை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். உண்மை குற்ற வாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story