தீவிர கண்காணிப்பு: 107 மையங்களில் 26,754 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்


தீவிர கண்காணிப்பு: 107 மையங்களில் 26,754 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2019 9:30 PM GMT (Updated: 14 March 2019 11:04 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை 107 மையங்களில் 26,754 மாணவ, மாணவிகள் எழுதினர்.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று மதியம் தொடங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் 107 மையங்களில் இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 2,503 மாணவர்களும், 2,521 மாணவிகளும் ஆக மொத்தம் 5,024 பேர் தேர்வு எழுதினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களில் 3,411 மாணவர்களும், 3,815 மாணவிகளும் ஆக மொத்தம் 7,226 பேர் தேர்வு எழுதினர். சிவகாசி கல்வி மாவட்டத்தில் 27 மையங்களில் 4,058 மாணவர்களும், 3,901 மாணவிகளும் ஆக மொத்தம் 7,959 பேர் தேர்வு எழுதினர். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில் 3,248 மாணவர்கள் 3,297 மாணவிகள் என மொத்தம் 6,545 பேர் தேர்வு எழுதினர்.

இந்த மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களிலும் சேர்ந்து 107 மையங்களில் 13,220 மாணவர்களும், 13,534 மாணவிகளும் என மொத்தம் 26,754 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு மையங்களை கண்காணிக்க 146 பேர் கொண்ட பறக்கும்படை குழு அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன் தலைமையில் வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கலெக்டர் சிவஞானம், சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

Next Story