உத்தமபாளையம் அருகே, கார்களை திருடிய 2 பேர் சிக்கினர்
உத்தமபாளையம் அருகே கார்களை திருடிய 2 பேர் சிக்கினர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 31.1.2019-ந்தேதியன்று இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 2 கார்களை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் உத்தமபாளையம்-சின்னமனூர் சாலையில் கோகிலாபுரம் விலக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 கார்கள் வந்தன. அவற்றை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கார்களை ஓட்டி வந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தனர். மேலும் கார்களுக்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த பாண்டித்துரை என்றும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த மாயக்கண்ணன் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த 2 கார்களும் சூர்யாவின் கடையில் இருந்து திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதுமட்டுமின்றி நெல்லை, மதுரை மாவட்டங்களிலும் அவர்கள் கார் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 5 கார்கள், 2 மோட்டார் சைக்கிள் களை பறிமுதல் செய்த னர். திருடப்பட்ட கார்களில் வக்கீல், பத்திரிகையாளர்கள் என்று போலி ஸ்டிக்கர்களை ஒட்டி அவர்கள் வலம் வந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story