மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது + "||" + Near Nellai One more arrested in youth murder

நெல்லை அருகே வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

நெல்லை அருகே வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
நெல்லை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் கெங்கைபாண்டி (வயது 23). இவர் சம்பவத்தன்று நெல்லைக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். அவர் நெல்லை அருகே அபிஷேகப்பட்டியை அடுத்த வெள்ளாளன்குளம் விலக்கு அருகில் வந்தபோது அவரை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கெங்கைபாண்டி உறவினரான கொண்டாநகரத்தை சேர்ந்த கணேசன் (33), அவருடைய மனைவி முப்புடாதி, நெட்டூர் காந்திநகரை சேர்ந்த சுடலை என்ற குமார் (30), நெட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சக்தி ஆகியோர் மீது சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கனவே கணேசன், குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து இருந்தனர்.

சக்தி, முப்புடாதி ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் சக்தியை சீதபற்பநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் முப்புடாதியை வலைவீசி தேடிவருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்
நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேரை பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.
2. நெல்லை அருகே மாட்டு வண்டி போட்டி
நெல்லை அருகே நடுவக்குறிச்சியில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
3. நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு
நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நெல்லை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
நெல்லை அருகே நடு ரோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் நசுங்கி பலியானார்.
5. தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
நெல்லை அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.