நாடாளுமன்ற தேர்தலையொட்டி வண்ண அடையாள அட்டை பெற வாக்காளர்கள் ஆர்வம் இ-சேவை மையங்களில் கூட்டம் அதிகரிப்பு


நாடாளுமன்ற தேர்தலையொட்டி வண்ண அடையாள அட்டை பெற வாக்காளர்கள் ஆர்வம் இ-சேவை மையங்களில் கூட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 March 2019 9:45 PM GMT (Updated: 15 March 2019 5:49 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் வண்ண அடையாள அட்டை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இ-சேவை மையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தொடர்ந்து புதிய வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. புதிய வாக்காளர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு துணை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை 60 சதவீதம் பேர் வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டையை பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை நகலை கொடுத்தாலே புதிதாக வண்ண அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொடுக்க வேண்டும். இதை சரிபார்த்த பிறகு புதிய வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதற்கு ரூ.25 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் நேற்று கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 

Next Story