மாவட்ட செய்திகள்

பாப்பாக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் பரிதாபம் + "||" + Near Papakuti Motorcycle crash Teacher Kills

பாப்பாக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் பரிதாபம்

பாப்பாக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் பரிதாபம்
பாப்பாக்குடி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் ஆசிரியர் பலியானார். நாய் குறுக்கே பாய்ந்ததால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
முக்கூடல்,

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி பூங்காநகரை சேர்ந்தவர் கோமதி நாராயணன் (வயது 56). இவர் முக்கூடல் அருகே உள்ள மருதம்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வு பறக்கும் படையிலும் கோமதிநாராயணன் ஈடுபட்டிருந்தார்.

சம்பவத்தன்று கோமதி நாராயணன் மாதாபட்டினம் மற்றும் அருகில் உள்ள பள்ளிகளில் கண்காணிப்பு பணிக்கு சென்றுவிட்டு, மாலையில் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பாப்பாக்குடி அருகே புதுக்கிராமம் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது.

இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கோமதிநாராயணன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி நாராயணன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.