மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு + "||" + Tuticorin ADMK Administrators Meeting Shanmuganathan MLA Participation

தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தூத்துக்குடியில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ், இணைச்செயலாளர் கோகிலா, துணைச்செயலாளர் செண்பகசெல்வன், தமிழரசி, பொருளாளர் ஜெபராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தி, வக்கீல் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் மாநகர வடக்கு பகுதிக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகளை ஒவ்வொரு வார்டாக நேரில் அழைத்து நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், மகளிரணி செரினா பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை