மாவட்ட செய்திகள்

நாக்பூரில் மண்ணின் மைந்தர் நிதின் கட்காரி வெல்வாரா? + "||" + Nitin Gadkari Will succeed?

நாக்பூரில் மண்ணின் மைந்தர் நிதின் கட்காரி வெல்வாரா?

நாக்பூரில் மண்ணின் மைந்தர் நிதின் கட்காரி வெல்வாரா?
நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பா.ஜனதா முன்னாள் தலைவர்களில் ஒருவரான நானா படோலே அறிவிக்கப்பட்டு உள்ளார். இது நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பண்டாரா- கோண்டியா தொகுதி எம்.பி.யான நானா படோலே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக கடந்த ஆண்டு பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் நானா படோலே நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது பா.ஜனதா மூத்த தலைவரான மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சொந்த தொகுதியாகும். நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரி இந்த தடவையும் அந்த தொகுதியிலேயே போட்டியிட உள்ளார். இதனால் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்கு பலத்த போட்டியாக நானா படோலே விளங்குவார் என்று கருதப்படுகிறது.

நானா படோலே நாக்பூரில் போட்டியிடுவது குறித்து நிதின் கட்காரியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

வாழ்த்து

இது நல்லது தான். எந்த வேட்பாளரும் யாரையும் எதிர்த்து போட்டியிட உரிமை உள்ளது. எந்த ஒரு வேட்பாளரையும் பற்றி விமர்சிப்பதிலும், குறைகூறுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

நான் மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை எடுத்துக்கூறி ஓட்டுகேட்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதாவில் இருந்தபோது ஒருமுறை நானா படோலே, நிதின் கட்காரியிடம் ஆசி பெற்றார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்காரி, “ஒருவர் கட்சியில் இருந்து விலகியதால் நான் அவருக்கு வழங்கிய ஆசிர்வாதம் விலகி போய்விடாது.

நான் அரசியலில் ஒருபோதும் பகைமை உணர்வை கடைப்பிடிப்பதில்லை. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.