மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் ரூ.1¼ கோடி மோசடி: தபால் அதிகாரி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு + "||" + Customizable savings account Rs.1¼ Crore fraud

வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் ரூ.1¼ கோடி மோசடி: தபால் அதிகாரி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் ரூ.1¼ கோடி மோசடி: தபால் அதிகாரி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சம் கையாடல் செய்த வழக்கில் துணை போஸ்ட் மாஸ்டர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மதுரை,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தபால் அலுவலகத்தில் துணை போஸ்ட் மாஸ்டராக வரதராஜன் என்பவர் பணியாற்றினார். அங்கு தபால் உதவியாளராக முருகேசன் வேலை செய்தார். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 2007-08-ம் நிதி ஆண்டில் தபால்துறை இணையதள சாப்ட்வேரை தவறாக பயன்படுத்தி, தபால் துறையின் திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்தை கையாடல் செய்துள்ளனர். இந்த தொகையில் ஒரு பகுதியை கார்த்திகா என்பவரின் கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

ஆண்டு தணிக்கையின்போது இந்த கையாடல் விவகாரம் வெளிவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சி.பி.ஐ. போலீசார் கூட்டுச்சதி, மோசடி, தகவல் தொழில்நுட்பச்சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குபதிவு செய்து, வரதராஜன், முருகேசன், அவர்களுக்கு உதவிய கார்த்திகா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், கைதான 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி எஸ்.கணேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், வரதராஜனுக்கும், முருகேசனுக்கும் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், கார்த்திகாவுக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரமும் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.