வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு


வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு
x
தினத்தந்தி 17 March 2019 4:15 AM IST (Updated: 17 March 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை கொண்ட வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிப்பரப்பப்பட உள்ளது.

அரியலூர்,

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை கொண்ட வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிப்பரப்பப்பட உள்ளது. அந்த வாகனத்தை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அந்த வாகனத்தில் ஒளிப்பரப்பான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காகவும், கருத்துக்களை தெரிவிப்பதற்காகவும் கலெக்டர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை மையம் இயங்குகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்காக இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், எழிலரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story