மாவட்ட செய்திகள்

பொன்னேரி அருகேஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு + "||" + school student is drowning in the lake

பொன்னேரி அருகேஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

பொன்னேரி அருகேஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பொன்னேரி,

பொன்னேரி அடுத்த காந்தி நகர் காட்டூர் பகுதியில் வசிப்பவர் விஜயகுமார். இவரது மகன் சதீஷ் (வயது 15). செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்றுமுன்தினம் மாலை சக நண்பர்களுடன் சென்ற மாணவன் சதீஷ், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவனை தேடி வந்தனர்.

ஏரியில் மூழ்கி சாவு

இந்தநிலையில் கொசஸ்தலை ஆற்றின் அருகில் பழைய எருமைவெட்டிபாளையம் ஏரியில் பிணம் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், சோழவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நேற்று பிணத்தை மீட்டனர். விசாரணையில் இறந்து கிடந்தது பள்ளி மாணவன் சதீஷ் என்பதும், நண்பர்களுடன் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.