ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பெற்றோர்கள் வழங்கினர்


ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பெற்றோர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 16 March 2019 9:30 PM GMT (Updated: 16 March 2019 10:33 PM GMT)

ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் யூனியன் ஆர்.எஸ்.மடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 8 வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆண்டு விழாவில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். இதன்படி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் குழந்தைகளின் பெற்றோர்கள் கல்வி சீர்வரிசை பொருட்களாக கம்ப்யூட்டர், மர பீரோ, ஸ்டீல் பீரோ, நிலைக்கடிகாரம், மின் விசிறி, புளூடூத் ஸ்பீக்கர்கள், டிவிடி பிளேயர் மற்றும் ஏராளமானவற்றை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அபிராமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து தேவர் முன்னேற்ற சங்க தலைவர் முனியசாமி, மறவர் முன்னேற்ற சங்க தலைவர் தமிழ்நாதன், ராமநாதபுரம் ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் முத்தீசுவரன், பொருளாளர் செல்வம், புலித்தேவன் இளைஞர் பேரவை சார்பில் உத்தரவேலு, தி.மு.க. சார்பில் வக்கீல்கள் பிரபாகரன், முத்துமுருகன், மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள், கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்றவர் களுக்கு முக்கிய பிரமுகர்கள் பரிசு பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினர்.

Next Story