தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்கு பெட்டகம் கையாளுவதில் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்கு பெட்டகம் கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி,
தென்னிந்தியாவின் பொருளாதார எந்திரமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டில் 6.97 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு இருந்தது. இந்த நிதியாண்டில் 15.3.19 வரை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 7.03 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது. இதன் மூலம் இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்கு பெட்டகம் கையாளுவதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 3-ம் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து சரக்கு பெட்டக முனையத்தை இயக்குபவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமசந்திரன் பாராட்டினார்.
இந்திய கப்பல்துறை அமைச்சகம் 2018-19-ம் நிதியாண்டு நிர்ணயித்துள்ள 7.67 லட்சம் சரக்குபெட்டகங்களை கையாளுவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story