மாவட்ட செய்திகள்

மதுகுடிக்க பணம் கிடைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + Police are investigating the suicide of a suicide bomber

மதுகுடிக்க பணம் கிடைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

மதுகுடிக்க பணம் கிடைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
மயிலாடுதுறை அருகே மதுகுடிக்க பணம் கிடைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வதிஸ்டாச்சேரி குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 32). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சந்தோஷ்குமார் குடும்பத்தினர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ்குமார் மதுகுடிக்க பணம் இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தோஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் வெளியூரில் இருந்து இரவில் வீட்டுக்கு திரும்பிய அவருடைய பெற்றோர், சந்தோஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.
2. லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப தகராறில் துயர முடிவு
லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப தகராறு காரணமாக இந்த துயர முடிவை தேடிக்கொண்டனர்.
3. பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய 10-ம் வகுப்பு மாணவி, தீக்குளித்து தற்கொலை 4 பேருக்கு வலைவீச்சு
திருவாரூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து தப்பிய 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. எருமப்பட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி அருகே பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை
கடன் தொல்லையால் காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.