மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு + "||" + Basic Features Collector survey in polling stations

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,

குன்னூர் அருகே மேலூர் அரசு தொடக்கப்பள்ளி, தூதுர்மட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி, வண்டிசோலை நடுநிலைப்பள்ளி, ஓட்டுப்பட்டரை சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விடுபட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக ஊட்டி அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்‘ என்ற விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதில் குன்னூர் தாசில்தார் தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
2. பள்ளிபாளையம், வெண்ணந்தூரில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
பள்ளிபாளையம், வெண்ணந்தூர் பகுதிகளில் குடிமராமத்து திட்ட பணிகள், கொசுப்புழு ஒழிப்பு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
3. நயினார்கோவில் பகுதியில் குடிமராமத்து பணி - கலெக்டர் ஆய்வு
நயினார்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
4. சேதமடைந்த வேலாயுதம்பாளையம் தடுப்பணையில் கலெக்டர் ஆய்வு
சேதமடைந்த வேலாயுதம்பாளையம் தடுப்பணையை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
5. கூத்தாநல்லூர் அருகே, பாலம் கட்டும் இடத்தில் மண் சரிவு - கலெக்டர் ஆய்வு
கூத்தாநல்லூர் அருகே பாலம் கட்டும் இடத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.